சதுரகிரியில் மழையில்லாததால் வறண்டு கிடக்கும் வழுக்கல் அருவி

வத்திராயிருப்பு: மேற்குதொடர்ச்சி மலையில் உளள் சதுரகிரியில் மழை பெய்யாததால் தாணிப்பாறை வழுக்கல் அருவி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.வத்திராயிருப்பு பகுதியில் மேற்குதொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுணர்மிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாதத்திற்கு 8 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குற்றாலம், சுருளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அருவிகள் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆனால், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் மட்டும் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மலை அடிவாரமான தாணிப்பாறை வழுக்கல் அருவி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால், அருவியில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

Related Stories: