13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், பெரம்பலூர், மதுரை, நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அது ஏப்ரல் மாதத்தில் மேலும் கூடி வெப்ப அலை அடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மே 4-ம் தேதி முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தது. இதனால் வெப்பம் மேலும் கூடியது. ஆனாலும், வேலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழையும், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் வெப்பம் தணியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கிழக்கு திசையிலிருந்து கடலில் இருந்து காற்று வீசுவதாலும் அவ்வப்போது மழை பெய்வதாலும் வெப்பம் தணியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மே 12 அல்லது 13 தேதிகளில் இலங்கை அல்லது குமரி கடலையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதியில் காற்றழுத்தம் ஒன்று உருவாக வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது. அது போல் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இதனால் வெப்பம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு, சேலம், பெரம்பலூர், மதுரை, நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: