10 கி.மீ ஓட்டம் சதீஷ் முதலிடம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93வது  சீனியர்  தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.  மாநிலம் முழுவதுமுள்ள  32 தனியார்  விளையாட்டு கிளப்கள் பங்கேற்கின்றன. தமிழக காவல்துறை, தெற்கு ரயில்வே சார்பிலும் 2 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த  10000 மீட்டர் ஓட்டத்தில்  சதீஷ் குமார் (ஜெனிசிஸ்  ஸ்போர்ட் பவுண்டேஷன்) 31 நிமிடம், 44.90 விநாடிகளில்  பந்தய தொலைவை கடந்து முதலிடம் பிடித்தார். தமிழக காவல்துறையின்  மணிகண்டன் (32 நிமிடம், 10 விநாடி) 2வது இடமும்,  கோகுல் (ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்  33 நிமிடம், 19.60 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

Related Stories:

More
>