ஆட்கொல்லி புலியை பிடித்து வனத்துக்கு அனுப்பவேண்டும்: வானதி சீனிவாசன் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நேற்று காஞ்சிபுரம் வந்த பாஜ தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மகாத்மா காந்தியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் புலியை சுட்டுக்கொல்லும் விஷயத்தில், புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிகமிக முக்கியமானது. ஒற்றை புலி என்பதை தாண்டி ஒட்டுமொத்த விஷயமாக கருதவேண்டும். தமிழக வனத்துறை மிக கவனமாக செயல்பட்டு புலியை சுட்டு கொல்லாமல்  லாவகமாக பிடித்து வனத்துக்குள் திருப்பி அனுப்ப உள்ளூர் மக்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: