மதுரை ஆதீனம் பேச்சு ‘கை லாஸ்’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் நித்யானந்தா

பரமக்குடி: நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மதுரை ஆதீனம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வஉசி சிலைக்கு மாலை அணிவித்து விழாவை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இன்று நேற்றல்ல... வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா விநாயகர் சதுர்த்தி விழா. அதனை, அரசே ஏற்று நடத்த வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்திற்கு அடையாளமாக இருந்த கர்னல் பதவி பறிபோய் விட்டது. ஆகவே அதை மீண்டும் இந்த சமுதாயத்திற்கு வழங்க சமுதாயத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராடி பெற வேண்டும். நித்யானந்தாவால் இங்கு ஒன்றும் செய்ய முடியாமல் ‘‘கை லாஸ்’’ ஆகிவிட்டதால்தான் அவர் கைலாஷ் சென்று விட்டார். இனியும் அவரால் மதுரை ஆதீனத்தை  ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்.

Related Stories: