பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரமோத், வெண்கலம் வென்ற மனோஜ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரமோத், வெண்கலம் வென்ற மனோஜ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பாராலிம்பிக் ஆடவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.  டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Related Stories: