‘தலைநிமிரும் தமிழகம்-நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்’ தமிழரசு இதழின் சிறப்பு வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்‘தலைநிமிரும் தமிழகம்-நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்’ தமிழரசு இதழின் சிறப்பு வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: ”தலைநிமிரும் தமிழகம்-நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்” தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளை தொகுத்து, செய்தித்துறையின் சார்பில் “தலைநிமிரும் தமிழகம்-நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்” தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.  இதனை தலைமைச் செயலாளர் இறையன்பு பெற்றுக் கொண்டார்.

இச்சிறப்பு மலரில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நூற்றுக்கும்  மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்,  மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மேற்கொண்ட களப் பணிகள்,ஆய்வுப் பணிகள் மற்றும் அமைச்சர்களுடன் மேற்கொண்ட துறை வாரியான ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றுடன் உங்கள் தொகுதியில் முதல்வர் துறை  தொடர்பான செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன்  மற்றும் செய்தித்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: