கொரோனா பரவலை தடுக்க சுப்பிரமணியசாமி கோயில் மூடப்பட்டது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்,  கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கால் அனைத்து கோயில்களும் ஏப்.25ம் தேதி முதல்  மூடப்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து ஊரடங்கு இருந்ததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தொடர்ந்து கோயில்கள் திறக்காமல் சாத்தப்பட்டன. தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு விதிமுறைகளுடன் நகர் மற்றும் கிராமபுறங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் கடந்த மாதம் 5ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இருப்பினும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு வரிசையாக அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்த வாரத்தில் கூடுதல் தளர்வில்லா கட்டுப்பாடு என்பதால், இன்று ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள கரிவரதராஜா பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், நேற்று ஆடி கிருத்திகையையொட்டி கோயில் நடை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுபோல், இன்று ஆடிப்பெருக்கையொட்டியும் நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியசாமி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், கோயில் வெளியே நின்று, வாசல் படியையும், கதவையும் தொட்டு வணங்கி சென்றனர்.

Related Stories: