மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆக.6ல் ஆர்ப்பாட்டம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு: கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது. இதனைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமமுக சார்பில் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்கவிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமையைக் காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக கடைபிடித்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: