தொற்று பரவல் முற்றிலுமாக குறைந்த நிலையில் 15 கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 9 ஸ்கிரீனிங் மையங்கள் தற்காலிக மூடல்: மாநகராட்சி முடிவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு எடுத்து வந்த பல்வேறு கட்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் சென்னையில் பாதிப்பு எண்ணிக்ைக அதிகரித்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டது. அதன்படி 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறைகள், முன்களப்பணியாளர்கள், தகவல் சேகரிப்பு, கோவிட் பாதுகாப்பு மையங்கள், சிறப்பு ஆம்புலன்ஸ் சேவைகள், மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனை வழங்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் என பல்வேறு நடவடிக்ககைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்த நிலையில் பராமரிப்பு செலவுகள் மற்றும் சம்பள செலவுகளை குறைக்க, மாநகராட்சி சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒரு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் 3 ஸ்கிரீனிங் மையங்கள் தற்காலிக மூட சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதன்படி 15 கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், 9 ஸ்கிரீனிங் மையங்களையும், இது தவிர, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கார் ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களை கண்காணித்து கொரோனா ஆலோசனைகளை வழங்க மருத்துவ இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை தற்காலிகமாக பணியமர்த்திய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 200 இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களையும் அப்பணியில் இருந்து தற்காலிகமாக விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படுக்கைகள், கட்டமைப்புகளை ஏதும் கலைக்காமல் அப்படியே வைக்க வேண்டும் என்றும், மூன்றாவது அலை வரும் பட்சத்தில் அதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: