சிறையில் உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு கொரோனா நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முத்துமனோ என்கின்ற 27 வயது இளைஞன், கடந்த மாதம் 22ம் தேதி  பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் காரணமாக பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கானது, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு(சிபிசிஐடி) மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: