அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ₹19 கோடி டெண்டருக்கு தடை விதிக்க கோரி வழக்கு: இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.19 கோடி மதிப்பிலான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் ேசர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் ேவர்கிளம்பி, கிள்ளியூர் வல்வச்சகோட்டம், பலுகல், கொடநல்லூர், ஏழுதேசம், திருவிதாங்கோடு, கல்லுக்கூட்டம், ஆரல்வாய்மொழி, கடையல், முளகுமூடு ஆகிய பேரூராட்சிகளில் ரூ.19.52 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு அதிமுக ஆட்சியின்போது கடந்த ஜன. 13ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பணிகளை ஒதுக்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன.

 ரூ.2 கோடிக்கு அதிகமான பணிகளுக்கான டெண்டருக்கு 30 நாள் அவகாசமும், ரூ.2 கோடிக்கு குறைவான பணிகளுக்கு 15 நாள் அவகாசமும் இருக்க வேண்டும். ஆனால்.  6 நாள் அவகாசம் மட்டுமே இருந்தது. ரகசியமான முறையில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால், ெபாதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். முறைப்படி விதிகளை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், டெண்டர் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘‘‘ெடண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கத் தடை விதிக்க வேண்டும்’’’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘டெண்டர் பணிகள் ஒதுக்கீடு, அதற்குரிய பணத்தை ஒப்பந்ததாரருக்கு வழங்குவது ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’’’’ என உத்தரவிட்டு, அரசுத் தரப்பில் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: