பியூமான்ட், ஹீதர் அரைசதம்: இங்கிலாந்து ரன் குவிப்பு

பிரிஸ்டல்: இந்திய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் டாமி பியூமான்ட், கேப்டன் ஹீதர் நைட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டிக்கான, இந்திய அணியில் ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராகர், ஸ்நேஹ் ராணா, டானியா பாட்டியா ஆகியோர் அறிமுகமாகினர். இங்கிலாந்து அணியில் அறிமுக வீராங்கனையாக சோபியா டங்க்லி இடம் பெற்றார். டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.வின்பீல்டு, பியூமான்ட் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. வின்பீல்டு 35 ரன் எடுத்து வஸ்த்ராகர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டானியா வசம் பிடிபட்டார், அடுத்து பியூமான்ட்டுடன் கேப்டன் ஹீதர் நைட் இணைந்தார்.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தனர். பியூமான்ட் 66 ரன் (144 பந்து, 6 பவுண்டரி) விளாசி ராணா பந்துவீச்சில் ஷபாலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 65 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்திருந்தது. ஹீதர் 69 ரன், நதாலியே ஸ்கிவர் 29 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Related Stories:

>