4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

பெங்களூரு: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச… இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன் குவித்தது. மந்தனா 136 ரன் (120 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் 103* ரன் (88 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். ஷபாலி 20, ஹேமலதா 24, ரிச்சா 25* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. கேப்டன் லாரா வுல்வார்ட் 135* ரன் (135 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), மரிஸன்னே காப் 114 ரன் (94 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். நடின் கிளெர்க் 28, போஷ் 18 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்ட நிலையில், பூஜா வஸ்த்ராகர் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். ஹர்மன்பிரீத் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி போட்டி பெங்களூருவில் ஜூன் 23ம் தேதி நடக்கிறது.

The post 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: