மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிட மாறுதல் அனைத்தும் கலந்தாய்வின் மூலமே நடைபெறுவதால் எனது அலுவலகத்தை அணுக வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிட மாறுதல் அனைத்தும் கலந்தாய்வின் மூலமே நடைபெறுவதால் தலைமை செயலகம் வந்து தன்னை அணுக வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை மா.சுப்பிரமணியன் கவனிக்கும் துறைக்கு கீழ் தான் வருகிறது. அதனால், அமைச்சர் மா.சுப்பிரமணியனை பார்த்து டாக்டர்கள் பணியிட மாற்றம், செவிலியர்கள் பணியிட மாற்றம், மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் பணியிட மாற்றம் கோரி தினசரி கட்சி தொண்டர்கள் தலைமை செயலகத்துக்கு வருவதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலுவலகத்தில் ஒரு நோட்டீஸ்  ஒட்டப்பட்டுள்ளது. அதில், \”தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல் அனைத்தும் வெளிப்படையான கலந்தாய்வின் வாயிலாக நடைபெறுவதால் பணியிட மாறுதல் தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது\” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: