இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் சொத்துக்கள் பத்திரப்பதிவை தடுக்க வேண்டும்

சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோயில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்க செயல் அலுவலர்கள் தடை மனு அளிக்க வேண்டும். இல்லையெனில் செயல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக சொந்தமாக நன்செய், புன்செய், மானா வாரி என மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேலும், 22 ஆயிரத்து, 600 கட்டிடங்கள், 33 ஆயிரத்து, 665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பின் பிடியில் கோயில் சொத்துக்கள் சிக்கி தவிக்கிறது. தொடர்ந்து அவர்கள் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பத்திரம் பதிவு செய்வது போன்ற வேலைகளில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது.  இதை தொடர்ந்து அந்த நிலங்களை மீட்கும் முயற்சியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கு முடிவுக்கு வராத நிலையில் கோயில் நிலங்களை மீட்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில், கோயில் நிலங்களை பிறருக்கு விற்பனை செய்வதை தடுக்க நவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை பத்திரம் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் கோயில் அலுவலர்கள்  அந்தெந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் தடை மனு அளிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ் நிலத்தில் உள்ள தகவல் படி தராமல் கோயில் சொத்துகள் பதிவு அலுவலரால் பதிவு செய்யப்படால், தவறுக்கு துணை போனதாக கருத்தில் கொண்டு  செயல் அலுவலர்கள் மீது மிகவும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கைஅறநிலையத்துறை  எச்சரிக்கை

Related Stories: