கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் என்று  சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை கலெக்டர் சீதாலட்சுமி ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு மற்றும் உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் ஆலோசனை தேவைப்படும் குழந்தைகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கின்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைப்பேசி எண்.1098, சென்னை மாவட்டத்தில் செயல்படும்.

மேலும் இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால் மாவட்ட ஆட்சித்தலைவர்/ தலைவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியிலோ, dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 9944290306/ 044-25952450 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தரிவிக்கலாம். மேலும், குழந்தைகளுக்கான இலவச தொலைப்பேசி எண்.1098, குழந்தைகள் நலக் குழு (வடக்கு மண்டலம்) தலைவார்- 9840135503, குழந்தைகள் நலக் குழு (தெற்கு மண்டலம்) தலைவர்- 9840083620, குழந்தைகள் நலக் குழு (மத்திய மண்டலம்) தலைவர்-9841889069 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: