டிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி

வேளச்சேரி: பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகரை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன் (38). நுங்கம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை, அப்பகுதியில் உள்ள கடைக்கு காரில்  சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர், அங்கிருந்து வஉசி நகர் மெயின் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில், காரின் இன்ஜினில் தீப்பிடித்து  எரிய தொடங்கியது. காரில் மயங்கிய நிஜாமுதீன், தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். பின்னர், நிஜாமுதீன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post டிரான்ஸ்பார்மர் மீது மோதி கார் தீப்பிடித்தது துணிக்கடை ஊழியர் உடல் கருகி பலி appeared first on Dinakaran.

Related Stories: