(வேலூர்) கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி பால்கம்பம் நடும் விழா மே 14ம் தேதி தேர் திருவிழா குடியாத்தத்தில் பக்தர்கள் திரண்டனர்

குடியாத்தம், மார்ச் 28: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி பால்கம்பம் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மே 14ல் தேர் திருவிழா, 11ல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசி தொடக்கத்தையொட்டி மே மாதம் 15ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிரசு திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று அம்மனை வழிபடுவார்கள்.இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனையொட்டி முன்னதாக மே 14ம் தேதி தேர் திருவிழாவும், மே 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த நிலையில், இந்தாண்டு சிரசு திருவிழாவையொட்டி நேற்று குடியாத்தம் ெகங்கையம்மன் கோயில் வளாகத்தில் பால்கம்பம் நடும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், நகராட்சி தலைவர் சவுந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகராட்சி துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மகேந்திரன், ஊர் நிர்வாகி சம்பத், கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோயில் ஆய்வாளர் பாரி, தக்கர் சங்கர், நகராட்சி கவுன்சிலர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின்பேரில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது….

The post (வேலூர்) கெங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி பால்கம்பம் நடும் விழா மே 14ம் தேதி தேர் திருவிழா குடியாத்தத்தில் பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: