ட்வீட் கார்னர்... ஜூலையில் திருமணம்! ஸ்விடோலினா மான்பில்ஸ் உற்சாகம்!!

டென்னிஸ் நட்சத்திரங்கள் எலினா ஸ்விடோலினா (26 வயது, உக்ரைன்), கேல் மான்பில்ஸ் (34 வயது, பிரான்ஸ்) இருவரும் கடந்த 2019 முதல் காதலித்து வருகின்றனர். இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தார்கள். இந்த நிலையில், ஸ்விடோலினாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மான்பில்ஸ் அடிக்கடி தகவல் பதியத் தொடங்கினார். இது அவர்களிடையே மீண்டும் காதல் துளிர்த்து வருவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் தங்களின் நிச்சயதார்த்த செய்தியை ட்வீட் செய்துள்ளனர். வரும் ஜூலை 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மான்பில்சுடன் இணைந்து உற்சாகமாக போஸ் கொடுக்கும் ஸ்விடோலினா தனது நிச்சயதார்த்த மோதிரத்தை மகிழ்ச்சி பொங்கக் காட்டும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Related Stories: