தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூத்தஞ்சேரி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது எஸ்.ஆர்.ராஜா மக்கள் மத்தியில் பேசுகையில், ‘மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்துள்ளேன். ரேஷன் கடைகள், நூலகம், சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தள்ளேன். மாடம்பாக்கம் பேரூராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
