நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி

சத்தியமங்கலம்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார் என செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, மாநாடு போல் நடைபெற்றது. சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றதால் விஜயமங்கலம் விஜயாபுரி அம்மன் கோயிலிலும், சத்தியமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கினார். அதேபோல தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய தவெக தலைவர் விஜய்க்கு செங்கோல் வழங்கினேன். இவ்வாறு அவர் கூறினார். பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உங்களை திமுகவின் பி.டீம் என்று கூறியுள்ளாரே என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்வது சரியானதாக இருக்கும். நயினார் நாகேந்திரன் அதிமுகவின் ‘பி’ டீம் ஆக இருக்கிறார்’ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Related Stories: