அண்ணாமலை உட்பட 612 பேர் மீது போலீஸ் வழக்கு

திருப்பூர்: திருப்பூர், இடுவாய் அடுத்த சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டி தரம் பிரிக்க ஏற்பாடுகளை கண்டித்து நேற்றுமுன்தினம் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் போலீசார் அண்ணாமலை உள்பட 612 பேரை கைது செய்து இரவில் விடுதலை செய்தனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 612 பேர் மீது 3 பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: