கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகள் குறித்து பாஜவிற்கு நன்றாக தெரியும். சிலர் புதிதாக வந்து ஈரோட்டை மஞ்சள் நகரம் என்று கண்டுபிடித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. களத்தில் இல்லாதவர்கள் பற்றி பேச தேவை இல்லை என விஜய் பேசியது, ஒருவேளை அவரைத்தான் அவரே குறிப்பிடுகிறாரோ? அவர்தான் களத்தில் இல்லை. திடீரென களத்திற்கு வருகிறார். திடீரென களத்திற்கு வருவதில்லை. அவர் எங்களை சொல்லவில்லை. நாங்கள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம்.
பத்து வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கே தமிழக மக்களிடம் அத்தனை இணைப்பு உள்ளது என்றால், 50 வருடங்களாக அரசியலில் உள்ள எங்களுக்கு எவ்வளவு இணைப்பு இருக்கும்?. நீங்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு மக்களிடம் இணைப்பை ஏற்படுத்தினீர்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. திமுக கூட்டணிக்கும், அதிமுக-பாஜ கூட்டணிக்கும் தான் போட்டி. சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் என்ன சொல்கிறார்களோ அதுதான். கலங்காமல் களங்கம் ஏற்படாமல் களத்தில் நிற்பவர்கள் நாங்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.
