அவனியாபுரம்: விஜய் குறித்த கேள்விக்கு என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என மதுரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டென்ஷனாக பதில் அளித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், ‘ராமநாதபுரம் தேர்தல் வழக்கு நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கவில்லை. பின்னர், ‘விஜய் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கம்பியில், மரத்தில் ஏறுகிறார்கள்.
கூட்டத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்’ என்றார். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக நான் அருமையான அறிக்கை விட்டுள்ளேன். அதை படித்து பாருங்கள் என்றார். தவெகவிற்கு இன்னும் பல தலைவர்கள் வருவார்கள் என்று விஜய் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி பெரியகுளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
