திருவாரூரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பேரணி, கருத்தரங்கம்

திருவாரூர் : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருவாரூரில் நேற்று பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மாலதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் தவமணி, விஜயா முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பாளர் தனலட்சுமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர். இதில் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்திட வேண்டும். பெண்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய பலன்களை நியாயமாக வழங்கிட வேண்டும். தனியார் நிறுவனங்களில் மகப்பேறு விடுப்பை உறுதிப்படுத்தவேண்டும்.

வணிக வளாகங்களில் வாய்ப்புள்ள நேரங்களில் அமர்ந்து பணியாற்ற இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் 8 மணி நேர பணியினை உத்தரவாதப்படுத்த வேண்டும் மற்றும் நாட்டில் பெண்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: