காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95வது கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிப்பு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் கூடுகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசின் உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் (தலைமைப் பொறியாளர், திருச்சி மண்டலம் மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு) கலந்து கொண்டனர். காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு, ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற சூழலில் வரும் 21ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ெடல்லியில் கூடுகிறது. இதையடுத்து அப்போது நீர் பங்கீடு குறித்து ஒழுங்காற்று குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையின் அடிப்படையில் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் நிலுவை நீர் அனைத்தையும் உடனடியாக திறந்து விடக்கோரி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

The post காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95வது கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: