கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடிவு: அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது தொடர்பாக பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாநில சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் உள்பட பல தனியார் ரிசார்ட் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மேம்படுத்த திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பழமையான சுற்றுலா தலங்களான பேலூர், விஜயபுரா, ஹம்பி, பாதாமி ஆகிய சுற்றுலா பகுதியில் நட்சத்திர ஓட்டல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 18 மாதங்களில் கட்டுமான பணி முடிக்கப்படும். இதற்கான பணியை மெ-ரைட்ஸ் நிறுவனத்துடன் சுற்றுலா வளர்ச்சி கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 4 ஓட்டல்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும். விஜயபுராவில் ரூ.16.74 கோடி செலவில் 57 அறைகள் கொண்ட ஓட்டலும், பாதாமியில் ரூ.18.32 ேகாடி செலவில் 72 அறைகள், ஹம்பியில் ரூ.28.20 கோடி செலவில் 75 முதல் 100 அறைகள், பேலூரியில் ரூ.20.71 கோடி செலவில் 75 அறைகள் கொண்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள் கட்டப்படும். இதற்கு தேவையான நிலம் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: