தாலியை அடகு வைத்து காஸ் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அவலம்: புலவர் இந்திரகுமாரி, திமுக இலக்கிய அணி செயலாளர்

மத்திய அரசு விலையை அதிகரிக்கும் பட்சத்தில் மாநில அரசாவது மானியத்தை கொடுத்து இல்லத்தரசிகளின் கவலையை போக்க வேண்டும். ஆனால், அதை இந்த அரசு செய்யவில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்டை வைத்து எரித்துக்கொள்ளுங்கள் எனக்கூறுகிறார். அவர் முதலில் கட்டை வைத்து எரிப்பாரா. ஏழைகள் கட்டை வைத்து எரிக்கும் அளவிற்கு கூட இங்கே மரங்கள் கிடையாது. வரவர கும்மிட்டி அடுப்பு வைத்து கூட எரிக்க முடியாத நிலை தான் உருவாகப்போகிறது. சவுக்கு கட்டையின் விலையும் காஸ் விலை அளவிற்கு ஏறிவிட்டது. மத்திய அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதற்கு தயாராக இல்லை.

முன்பு காஸ் மானியத்தை வங்கியில் செலுத்திக்கொண்டிருந்தார்கள். அதை முழுமையாக நிறுத்திவிட்டார்கள். இது நிறைய மக்களுக்கு தெரியவில்லை. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய அரசாக தான் மத்திய அரசு உள்ளது. அதிலும் இல்லத்தரசிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக போராட்டத்தை நடத்தினாலும் அதை இந்த அரசு கவனிக்கப்போவது இல்லை. வேளாண் சட்டங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளையே கவனிக்காத இந்த அரசு பெண்களை எங்கே கவனிக்கப்போகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி எல்லா இடங்களிலும் பேசுகிறார்.

ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற அரசாக இருந்தால் முன்பு இருந்த விலைக்கே காஸ் வழங்கப்படும் என்று கூறக்கூடிய அரசாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையும் இந்த அரசு கூறவில்லை. இந்த அடிமை அரசால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய பெண்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியா முழுவதும் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களின் தங்களின் தாலியை விற்று சாப்பிடக்கூடிய நிலையை தான் அனுபவித்து வருகிறார்கள். பெண்களை மோசமான நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது.

ஆனால், பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவு சமைக்கக்கூட பணம் இல்லாத நிலை தான் இங்கு உள்ளது. அந்த அளவிற்கு ஏழ்மைக்கும், வறுமைக்கும் நாம் ஆளாகிவிட்டோம். வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு பெண்கள் வந்துவிட்டார்கள். இதற்கு ஒரே தீர்வு திமுக ஆட்சியில் அமர வேண்டும். அப்போது தான் பெண்களின் வாழ்க்கை உயரும். பெரும் பணக்காரர்களுக்கு தான் பொருளாதார உயர்வு என்பது உள்ளது.

ஏழை மக்களுக்கு இவர்களின் பட்ஜெட்டினால் எந்த பொருளாதாரமும் உயரவில்லை. கேஸ் விலை ஏறும் போதே காய்கறி விலையும் ஏறிவிட்டது. பாஜக அரசின் கண்ணில் ஏழைகள் தெரியவில்லை. ஏழைகள் கட்டை வைத்து எரிக்கும் அளவிற்கு கூட இங்கே மரங்கள் கிடையாது. வரவர கும்மிட்டி அடுப்பு வைத்து கூட எரிக்க முடியாத நிலை தான் உருவாகப்போகிறது. சவுக்கு கட்டையின் விலையும் காஸ் விலை அளவிற்கு ஏறிவிட்டது. மத்திய அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதற்கு தயாராக இல்லை.

Related Stories: