சிக்னல் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் கேட்கீப்பரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது

விழுப்புரம், மார்ச் 9: சிக்னல் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமான நிலையில் கேட்டை திறக்காத ஊழியர் மீது தாக்குதல் நடத்திய விழுப்புரம் வாலிபர்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விழுப்புரம் உள்ளது. நாட்டில் பல முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவைகளை கொண்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் இருந்து தாதருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விழுப்புரம் வந்தது. அதன் பின்னர் இரவு 10.10 மணிக்கு ரயில் புறப்படுவதற்காக சிக்னல் போடப்பட்டது. ஆனால் அந்த ரயிலில் உள்ள கார்டு பெட்டியில் கார்டை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட சிக்னல் போட்டவுடன், ரயில் நிலையம் அருகில் உள்ள முத்தோப்பு ரயில்வே கேட்டில் இருக்கும் சிக்னலும் இயங்கியதால் அந்த கேட் மூடப்பட்டது. ஆனால், கார்டு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் தாதர் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தாமதமானது. இதனால் முத்தோப்பு கேட்டில் வெகுநேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளில் 2 பேர், அங்கிருந்த கேட்கீப்பர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்லால்மீனா மகன் சஞ்சய்குமார்மீனா என்பவரிடம் சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனிடையே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 10.50 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முத்தோப்பு கேட்டை கடந்து சென்றது. அதன் பிறகு சஞ்சய்குமார்மீனா, விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த பாபு மகன் பாலாஜி, கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சிக்னல் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் கேட்கீப்பரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: