பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை?: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.!!!

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஜனவரி 29க்குள் ( இன்று இரவுக்குள் )முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனைபோல், பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் நேரடியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பட்ஜெட் கூட்டத்தொடர், ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி ஏழு பேர் விடுதலை குறித்து பேசவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: