5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 5 நாள் ஓய்வு எடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருவதற்கு முடிவு செய்தார். கடந்த 29ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் பகல் 1 மணியளவில் கொடைக்கானல் வந்தார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வந்தனர்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் குடும்பத்துடன் தங்கினார். கடந்த 30ம் தேதி கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் கோல்ப் விளையாடினார். அங்கிருந்து வெளியே வந்து சுற்றுலாப் பயணிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால், கட்சிக்காரர்களை சந்திக்கவில்லை. முதல்வர் மே 4ம் தேதி சென்னை திரும்புவார் என கூறப்பட்டது. ஆனால், ஒரு நாள் முன்னதாக இன்று மதியம் கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தார்.

The post 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: