மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில்; மக்களவை தேர்தலில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது. வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் தொடர்பான முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவு சதவீதம், இறுதிக்கட்ட சதவீதத்துடன் வாக்குகளின் எண்ணிக்கையையும் வெளியிட வேண்டும். புள்ளி விவரங்கள் தொடர்பான முரண்பாடுகளை களைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணத்தை ஆணையம் தெரிவித்திருக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி appeared first on Dinakaran.

Related Stories: