பொங்கல் பண்டிகையை ‘இனிப்பாக்க’ திருவில்லிபுத்தூரில் தயாராகுது தித்திக்கும் மலையாள வெல்லம்

திருவில்லிபுத்தூர் :பொங்கல் பண்டிகையையொட்டி, திருவில்லிபுத்தூர் பகுதியில் மலையாள வெல்லம் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கலையொட்டி ‘உருட்டு வெல்லம்’ என அழைக்கப்படும் மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக தற்போது நடந்து வருகிறது. திருவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை அறுவடை செய்து, வெல்லம் தயாரித்து வருகின்றனர்.

சேலத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் தயாரிக்கும் வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. இதனால் ஏராளமானோர் திருவில்லிபுத்தூர் வந்து வாங்கிச் செல்கின்றனர். மண்டை வெல்லம், மலையாள வெல்லம் என இருவகையாக தயாரிக்கின்றனர். பார்ப்பதற்கு திருப்பதி லட்டு போன்று தோற்றமளிக்கும் மலையாள வெல்லமே அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. கேரளாவுக்கு அதிகளவு அனுப்பப்படுவதால் இப்பெயர் பெற்றது. பொங்கலையொட்டி இரவு, பகல் பாராமல் விவசாயிகள் வெல்ல தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: