300 காகங்கள்.. 50 மயில்கள்.. நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் பலி... இந்தியாவில் புதிய பிரச்னையாக உருவெடுத்தது பறவை காய்ச்சல்!!

ஜெய்ப்பூர் : இந்தியாவில் புதிய பிரச்னையாக பறவைக் காய்ச்சல் பரவல் உருவெடுத்துள்ளது. இறந்த காகங்களில் அந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர், ஜால்வர் பகுதிகளில் திடீரென 300க்கும் மேற்பட்ட காகங்கள் செத்து மடிந்தன. அவற்றிலிருந்து காய்ச்சல் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.காகங்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒருவாரத்தில் 300க்கும் மேற்பட்ட காகங்களும், 52 மயில்களும் இறந்துள்ளன. இதனையடுத்து ராஜஸ்தான் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வகையில் விலங்குகளோ அல்லது பறவைகளோ இறந்தால் தகவல் அளிக்குமாறு ஜால்வர் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்ததை போல மத்திய பிரதேச மாநிலத்தின் 3 மாவட்டங்களிலும் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் சில உயிரிழந்த நிலையில், அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. து தொடர்பான தகவலை கேரள வனத்துறை அமைச்சர் கே. ராஜு உறுதி செய்துள்ளார். உடனடியாக கேரள மாநிலத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: