குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு தடையில்லா சான்று நிலத்தடி நீர் எடுக்க இனிமேல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது

* நிலத்தடி நீர் எடுக்க 1500 ஆலைகள் அனுமதி பெற்றுள்ளன.

* மேலும் 690 நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

சென்னை: தமிழகத்தில் வணிக ரீதியாக நிலத்தடி நீர் பயன்படுத்துவதற்கு நிலத்தடி நீர் வள ஆதார விவர குறிப்பு மையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளில் மூல பொருட்கள் தயாரிக்க தண்ணீர் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒரு முறையும், குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்தும் தண்ணீருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் என இரண்டு விதமான தடையில்லா சான்று கேட்டு அனுமதி பெறப்படுகிறது. இது போன்று, 1500 ஆலைகள் மட்டுமே அனுமதி பெற்று தண்ணீர் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விதிகளை மீறி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் அனுமதி கேட்டு பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், 690 நிறுவனங்கள் அனுமதி கேட்டு நேரில் விண்ணப்பித்துள்ளது. இது போன்று பலர் நேரில் வர வேண்டியிருப்பதால், அவர்கள் அனைவருக்கும் உடனடியாக அனுமதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண தடையில்லா சான்று கேட்டு இனி ஆன்லைன் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அரசு செயலாளர் மணிவாசன் தலைமையில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகர், செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு முதல் தொழிற்சாலைகள் தடையில்லா சான்று பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பாக புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே, நிலத்தடி நீர் இணையதளம் இருப்பதால், அதிலேயே இதற்கான வசதிகளை ஏற்படுத்தப்படுகி

Related Stories: