நடப்பு ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடர்களில் 2 அணிகளும் இதுவரை 14முறை மோதியுள்ளன. அவற்றில் ஐதராபாத் 10 முறையும், பஞ்சாப் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 2 அணிகள் மோதிய போட்டிகளில் அதிகபட்சமாக ஐதராபாத் 212 ரன்னும், பஞ்சாப் 211 ரன்னும் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 121 ரன்னும், பஞ்சாப் 119 ரன்னும் எடுத்தன.