மன்கேடிங் பற்றி பான்டிங்குடன் பேசுவேன்... - டெல்லி கேப்பிடல்ஸ் ஸ்பின்னர் ஆர். அஷ்வின்

பந்து வீச்சாளர்கள் தவறு செய்தால் நோ பால் வழங்கப்படுகிறது. ப்ரீ ஹிட் வேறு கிடைக்கிறது. அதன்மூலம் ஒரே பந்தில் அதிகபட்ச ரன்னை பேட்ஸ்மேன்கள் எடுக்கிறார்கள். அதனால், பந்துவீச்சை பூர்த்தி செய்யும் முன்பாகவே ரன் எடுப்பதற்காக கிரீசை விட்டு வெளியேறும் பேட்ஸ்மேனை ‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்வது தவறில்லை. பேட்ஸ்மேன்கள் தவறிழைக்கும்போது, பந்துவீச்சாளர் பயன்பெறும் வகையில் விதிகள் இருப்பதுதான் நியாயமாக இருக்கும். இது குறித்து ஏற்கனவே பயிற்சியாளர் பான்டிங்குடன் பேசியுள்ளோன். கடந்தவாரம் தொலைபேசி மூலம் உரையாடினோம். நல்ல விவாதமாக இருந்தது. இருந்தாலும் நேரில் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே  அவர் துபாய் வந்ததும் பேசுவேன். அப்போது நாங்கள் ஏற்கனவே என்ன விவாதித்தோம் என்றும் கூறுவேன்.

Related Stories: