ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்: உணவு, இருப்பிடம் இன்றி தவிப்பதாக வேதனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவின்றி தவிக்கும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 6 மாதமாக வேலையின்றி தவிப்பதாக தமிழக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உணவு, இருப்பிடம் இன்றி கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தங்களை மீட்கக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக தொழிலாளர்கள் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேளைக்கு சென்ற தமிழக தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான தமிழர்கள் சிக்கி இருப்பதாக தமிழக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

உதவி வேண்டுவோர் தமிழ்மக்கள் மன்றத்தின் பொதுச்செயலாளர் பிர்தோர்ஸ் பாஷா, சமூக ஆர்வலர் கவுசர் பேக் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்கள் தெரிவித்ததாவது, சுமார் 60 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி தவித்து வருகின்றோம். கொரோனாவால் வேலை எழுந்து சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழக அரசு இதில் தலையிட்டு தங்களை தாயகம் அழைத்து செல்ல உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: