ட்வீட் கார்னர்… பயிற்சி தொடங்கியது!

ஸ்பெயின் நாட்டில் கோவிட்-19 நோய் தொற்று தீவிரமாக இருந்ததால், லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கிளப் அணிகள் மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளன. மெஸ்ஸி, சுவாரெஸ், கிரீஸ்மேன் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ள பார்சிலோனா எப்சி அணியும் புதிய உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. குழுவாக இல்லாமல், வீரர்கள் தனித்தனியே பயிற்சி செய்யத் தொடங்கி உள்ளனர். இது குறித்து பார்சிலோனா கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள தகவலில், ‘இன்று நாம் போராடுகிறோம்… நாளை நாம் விளையாடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories: