டென்னிஸ் சங்கங்கள் இணைய மர்ரே ஆதரவு

லண்டன்: ஆண்கள் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்களை இணைப்பதுடன் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளை வழங்க வேண்டுமென்று நட்சத்திர வீரர் ஆன்டி மர்ரே  வலியுறுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாதனை வீரர் பெடரர் ஏடிபி, டபிள்யூடிஏ ஆகியவற்றை ஒரே சங்கமாக மாற்ற வேண்டும் என்று கடந்த  மாதம் வலியுறுத்தி இருந்தார். அவரது கருத்துக்கு முன்னணி வீரர், வீராங்கனைகள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து வீரரும் 2 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஆன்டி மர்ரே இது கூறியதாவது: வீரர்கள் வீராங்கனைகளுக்கு என தனித்தனியே உள்ள சங்கங்கள் இணைய இதுவே சரியான தருணம்.

முன்னணி வீரர்கள் பலரும் இது தொடர்பாக இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இது உண்மையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இணைப்புக்குப் பிறகு சங்கத்தில் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளை வழங்க வேண்டும். பலகாலமாக பேசப்பட்டு வரும் இந்த சங்கங்களின் இணைப்பு இனி வெறும் பேச்சாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும். இது டென்னிஸ் விளையாட்டை மேலும் வலுப்படுத்துவதுடன் வீரர், வீராங்கனைகளின் நலனும் மேம்படும். இவ்வாறு மர்ரே கூறியுள்ளார்.

Related Stories: