இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா நேற்று தனது 33வது பிறந்தநாளை மிக அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஹிட்மேன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரோகித், இந்திய அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டியில் 2141 ரன் (அதிகம் 212, சராசரி 46.54, சதம் 6), 224 ஒருநாள் போட்டியில் 9115 ரன் (அதிகம் 264, சராசரி 49.27, சதம் 29), 108 டி20 போட்டியில் 2773 ரன் (அதிகம் 118, சராசரி 32.62, சதம் 4) விளாசி உள்ளார்.
