சில்லி பாயின்ட்...

* ஆஸி. நட்சத்திரம் ஷேன் வார்னின் ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த உலக லெவன் அணி: வீரேந்திர சேவக், சனத் ஜெயசூரியா, சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், குமார் சங்கக்கரா (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, சோயிப் அக்தர், கர்ட்லி அம்ப்ரோஸ்.

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது என்று அதிரடி தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இவர் கடைசியாக ஜூலை 2015 ஜிம்பாப்வே டூரில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
Advertising
Advertising

* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் டோக்கியோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் சுடர் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிரதமர் நிவாரண நிதியாக ₹35 லட்சம், மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதியாக ₹24 லட்சம் என மொத்தம் ₹59 லட்சம் நன்கொடை வழங்க முன்வந்துள்ளார்.

* மார்ச் மாதம் நடப்பதாக இருந்து தள்ளிவைக்கப்பட்ட உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 2020 ஐபிஎல் டி20 தொடரை ரசிகர்கள் இல்லாமல் காலியான ஸ்டேடியங்களில் நடத்தலாம் என சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Related Stories: