நெல்லை பெண்ணிடம் போஸ்டல் ஆர்டருக்கு 2 ரூபாய் 50 காசு கூடுதலாக வசூலித்த போஸ்ட் மாஸ்டருக்கு 20,000 அபராதம்: தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி: நெல்லையைச் சேர்ந்த பெண்ணிடம் போஸ்டல் ஆர்டருக்கு 2.50 கூடுதலாக வசூலித்த தபால் அதிகாரிக்கு ₹15 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.  நெல்லை  சந்திப்பு சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் சூரியகலா. இவர்  கடந்த 2017 பிப்ரவரி 3ம் தேதி கோவில்பட்டி லெட்சுமிபுரம் துணை தபால் நிலையத்தில் 55 செலுத்தி இந்தியன்  போஸ்டல் ஆர்டர் வாங்கினார். அதன் விலை 50,  கமிஷன் 5 என அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால், ரசீதில்  கமிஷன் 2.50 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கூடுதலாக வசூலித்த  2.50ஐ  திரும்பத்தருமாறு கேட்டார். ஆனால், இதைத் தரமறுத்த போஸ்ட் மாஸ்டர், சூரியகலாவுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக பேசினார்.

இதையடுத்து  சூரியகலா தனது மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 95ஆயிரம் மற்றும் வசூல் செய்த  தொகை 2.50ஐ வட்டியுடன் திருப்பித் தரக்கோரி தூத்துக்குடி  நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த  நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், இழப்பீடாக மனுதாரருக்கு  15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்  தொகையாக 5 ஆயிரத்தை போஸ்ட் மாஸ்டர் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில்  6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவிட்டார்.

Related Stories: