மந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது செயல்பாட்டில் இருந்த திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருந்த மான்டெக் சிங் அலுவாலியா எழுதிய `பின்புலம்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: தற்போதைய மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை, வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. அரசு, அது எதிர்க்கொள்ளும் பிரச்னையை அங்கீகரிக்காவிட்டால், அதனை திருத்திக் கொள்வதற்கான நம்பத்தகுந்த தீர்வு காண முயற்சிக்காது. இது மிகவும் ஆபத்தானது. இது விவாதிக்கப்பட வேண்டியது.

வரும் 2024-25ம் ஆண்டில் இந்தியாவை 5 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியா மாற்றப்படும் என்று ஆளும் கட்சியினர் கூறுவதற்கும் இதற்கும் முரண்பாடு உள்ளது. அதே நேரம், விவசாயிகளின் வருமானம் மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை எதிர்பார்க்க முடியாது. 1990களில், பொருளாதார தாரளமயமாக்கலுக்கு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆதரவு அளித்ததை மான்டெக் சிங் பாராட்டியுள்ளார். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

Related Stories: