சிண்டிகேட் வங்கி சார்பில் நிதி விழிப்புணர்வு கூட்டம்

சென்னை: சிண்டிகேட் வங்கி சார்பில், குறு சிறு நடுத்தர தொழில்கள் திட்டம் (எம்எஸ்எம்இ) மற்றும் நிதி விழிப்புணர்வு வாரம், கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. மண்டல துணை மேலாளர் ஜெகதீசன், உதவி பொது மேலாளர் பாலாஜி, துணை தலைவர் சத்யபால், மண்டல மேலாளர் தாமஸ் உள்பட அதிகாரிகள், சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர்கள் 60 வாடிக்கையாளர்களுடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடப்பு நிதி ஆண்டின் 3ம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் குறித்து விளக்கப்பட்டது. வங்கியின் நிகர லாபம் ₹430 கோடியாக ஈட்டப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த வங்கி சார்பில், குறு சிறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்க முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நாட்டின் உற்பத்தியில் 45 சதவீதம் பங்களிப்பை எம்எஸ்எம்இ துறையினர் வழங்குவதால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், 59 நிமிடங்களில் கடன் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் எம்எஸ்எம்இ துறையினருக்கு கடன் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.

Related Stories: