புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து வந்த 1,353 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 13,112 பேருக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
