இசையமைப்பாளரும் நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 75 வயதான அவர், வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக திரையுலகிற்கு அறிமுகமானவர். சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி பாடகி சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்ட டி.எஸ்.ராகவேந்திராவிற்கு, 2 மகள்கள் உள்ளனர். அவரது மறைவு திரைத்துறையினரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: