கடலூர் கள்ளக்குறிச்சி அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை : சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பதில்

சென்னை : தமிழகத்தில் மேலும் 4  மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். கடலூர் கள்ளக்குறிச்சி அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.3ம் நாளான இன்று

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், திமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த மருத்துவ கல்லூரியை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக ஆட்சி முடிவடையும் நேரத்தில் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இருப்பினும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.தற்போது கடலூர் கள்ளக்குறிச்சி அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க முதல் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.விரைவில் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான உரிய அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்

Related Stories: