பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுசொர்க்கவாசல் வரும் 6ம் தேதி திறப்பு: நாளை முதல் சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம்

சென்னை: பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இணை ஆணையர் ஹரிப்பிரியா தெரிவித்தார். 108 வைணவ தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 6ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணியளவில் முதல் 2.45 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 2.45 மணிமுதல் 4 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை நடைபெறுகிறது. 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நம்மாழ்வாருக்கு காட்சி தருகிறார். 4.30 மணி முதல் 5 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்கிறார். வேத திவ்யப் பிரபந்தம் துவங்கப்படுகிறது. இதை தொடரந்து காலை 5 மணி முதல் காலை 5.10 மணி வரை பரமபதவாசலில் உபயதாரர் மரியாதை மற்றும் தரிசனம் செய்கிறார். காலை 5.10 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுக்கள் உற்சவர் பத்தி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து, திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளிகிறார். இது குறித்து சென்னை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு வரும் 6ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ெசார்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசை விவரங்களை அறிய கோயிலில் செல்லும் வழிகள், கோயிலில் இருந்து வெளியேறும் வழிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைப்படம் நான்கு மாட வீதி சந்திக்கும் 4 இடங்களில் வைக்கப்படும். கோயிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்க அகண்ட எல்இடி திரையில் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள கோயில் நூலகத்தின் அருகிலும் மேற்கு கோபுர வாசல் அருகிலும் மற்றும் கோயில் பின்பகுதியிலும் வைக்கப்படவுள்ளது.பக்தர்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தென்னக ரயில்வே மூலம் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் தரும் பக்ரத்களுக்கு இலவசமாக லட்டு, கீதை சுலோகம், சாரம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம், நாமாவளி அடங்கிய புத்தகம் மற்றும் மூலவர் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் படம், கோயில் வரலாறு அடங்கிய சிற்றட்டை, அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு முன்கோபுரம் வாசல் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன சீட்டு நாளை (4ம் தேதி) பிற்பகல் 1 மணிக்கு ஆதார் அட்ைட நகல் காண்பிக்கும் ஒரு நபருக்கு 1 சீட்டு வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் காலை மணி முதல் காலை 10 மணி வரை, சீனியர் சிட்டிசன் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை, உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை தெற்கு மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசை செல்லும் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி அன்று தெற்கு மாட வீதி மற்றும் தேரடி தெருவில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின் போது, பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி லட்சுமி, உதவி ஆணையர் கவினிதா, ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கர், மத்திய சென்னை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: